எதற்காக அப்பாகடை.காம் ? (உணர்வுகளின் சங்கமம்)

சிறு வயதில் நம் எல்லோருக்கும் ஆசை இருந்திருக்கும். அப்பா போல தலை முடி இருக்க வேண்டும். அப்பா போல சட்டை இருக்கவேண்டும்; முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்து மிக ஸ்டைலாக இருக்க வேண்டும்; அந்த வயதில் நமக்கு எல்லாமே அப்பாதான் ரோல் மாடல்!

அப்பா கட்டியிருக்கும் டைட்டன்  வாட்ச்…நம்மில் பலர் அப்போதே நம் தேர்வுகளுக்கு அதைத்தான்  கட்டிக்கொண்டு சென்றிருப்போம்.
அவர் செருப்பை நாம் போட்டு இரண்டு மூன்று  முறை நம் தெருவை வலம் வந்திருப்போம்.. நம் நண்பர்களிடம் பெருமையாய் சொல்லிக்கொள்வோம். அவர் கால் அளவும் நம் கால் அளவும் ஒன்று என.

அவர் போடும் லெதர் பெல்ட் அல்டிமேட்! அவர் எப்போதும் கையில் வைத்திருக்கும் பர்ஸ் அதைவிட அட்டகாசம். அதிலிருந்து பணத்தை எண்ணி நீட்டும்போது அந்தப்பர்ஸோடு நம் கைக்கு வந்து விடாதா என ஏங்கி இருப்போம்.

அப்பாவைப்பற்றி நினைக்கும்தோறும் ஏதாவது ஒன்றை நாம் சாதித்தே தீர வேண்டும் என்னும் வேட்கை தானாக நம் மனதில் அழுத்தம் திருத்தமாக வந்து அமர்ந்து கொள்ளும்.

வளர்ந்து பெரியவர்களாகி வேலைக்குப்போகும்போது, அவருக்கென்று எதையும் நம்மிடம் கேட்பதே இல்லை. நாமும் அதைபொருட்படுத்தாமல் கடந்து விடுவோம்.

இனியும் அது நடந்து விடக்கூடாது என்பதால் தான் அப்பாகடை.காம் (appakadai.com)

நம் பொக்கிஷங்களில் ஒன்று நம் அப்பா. அவர்கள் இருக்கும்போதே நாம் அவர்களைக்கொண்டாட வேண்டும். அவர்களை  எப்போதும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும்  வைத்திருக்க வேண்டியது பிள்ளைகளாகிய நம் கடமை.

அதற்காகத்தான்  அப்பாகடை.காம் ஒரு விசேஷ முயற்சியை எடுத்திருக்கிறது.

நம் அப்பாவுக்கு என்னென்னவெல்லாம் பிடிக்குமோ அதை எல்லாம் அவர்களுக்குப்பரிசாக நாம் அவர்களுக்குக்கொடுத்து மகிழ தன்னால் ஆன முயற்சியை எல்லாம் எடுத்துக்கொண்டிருக்கிறது.

அதற்கு முன்னோட்டமாக, சில அழகிய பரிசுப்பொருட்களை அறிமுகம் செய்து வைக்கிறது.

உங்கள் அன்புள்ள அப்பாவிற்குக்கொடுத்து மகிழுங்கள்!

அவர்கள் நம் உணர்வுகளின் குவியல்கள். அன்புச்சங்கமத்தில் கரைந்திடுங்கள்!